Type Here to Get Search Results !

இன்று‌ அனைத்து ஊராட்சிகளிலம் கிராம சபை கூட்டம் நடைபெறம் அரசு தகவல்

Arun Kumar J

 அக்டோபர் 11|புரட்டாசி 25



கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய குறைந்த பட்ச எண்ணிக்கை (கோரம்)  10% என்பது பழைய சட்ட விதி சட்டம்  திருத்தம் செய்யப்பட்டுள்ளது தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் அடிப்படையில்  குறைவெண் விபரங்கள்  படத்தில் உள்ளது. 500 வாக்காளர்கள் உள்ள ஊராட்சியில்  குறைந்த பட்சமாக 50 வாக்காளர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் அதில் குறைந்த பட்சம் பெண்கள் 16 பேர் (1/3 பங்கு) இருக்க வேண்டும் எஸ்சி எஸ்டி மக்கள் தொகை விகிதாசாரம் அடிப்படையில் கட்டாயம் இருக்க வேண்டும்  500 வாக்காளர்கள் உள்ள ஊராட்சியில் எஸ்சி  மக்கள் தொகை 100 என்றால் கட்டாயம் 10  வாக்காளர்கள் எஸ்சி   சமுதாமத்தில் இருந்து கலந்துக் கொள்ள வேண்டும்.



கோரம் கணக்கிடும் போது

1. குறைந்த பட்சம் வாக்காளர்கள்


2. குறைந்த பட்சம்  பெண் வாக்காளர்கள்


3. குறைந்த பட்சம்  எஸ்சி -  எஸ்டி வாக்காளர்கள்


இந்த மூன்று விசயங்களையும் கட்டாயம் கணக்கிட வேண்டும்.


#கிராமசபை_குறைவெண்:


500 வாக்காளர்கள் உள்ள ஊராட்சியில்  குறைந்த பட்சமாக 50 வாக்காளர்கள் கலந்துக் கொள்ள வேண்டும்

3000 வாக்காளர்கள் உள்ள ஊராட்சியில்  குறைந்த பட்சமாக 100 வாக்காளர்கள் கலந்துக் கொள்ள வேண்டும்

10,000 வாக்காளர்கள் உள்ள ஊராட்சியில்  குறைந்த பட்சமாக 200 வாக்காளர்கள் கலந்துக் கொள்ள வேண்டும்

கோரம் கணக்கிடும் போது அந்த ஊராட்சியில்  வாக்குரிமை இல்லாத அரசு ஊழியர்களை கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது. மக்கள் தொகை அடிப்படையில் கணக்கு போட கூடாது வாக்காளர்கள் எண்ணிக்கையில் மட்டுமே கணக்கு போட வேண்டும் கோரம் கணக்கிடும் வேலையை ஊராட்சி செயலாளர் செய்ய வேண்டும் அதை பற்றாளர் கண்காணிக்க வேண்டும்.



கிராம சபையின் கடமைகள்:-


*கிராம ஊராட்சியின் ஆண்டு வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல்.

* தனி நபர் பயன்பெறும் திட்டங்களுக்கான பயனாளிகள் பட்டியலுக்கு அங்கீகாரம் அளித்தல் மற்றும் சமுதாய சொத்துக்களை ஏற்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு அங்கீகாரம் அளித்தல்.


* இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற திட்டங்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை ஆய்வு செய்தல்.


கிராம ஊராட்சிகளால் நிறைவேற்றப்படும் பணிகளின் தரத்தை சமூக மற்றும் தொழில் நுட்ப தணிக்கை மூலம் கண்காணித்தல் மற்றும் கணிப்பாய்வு செய்தல்.


கிராம ஊராட்சிக்கான ஆண்டுத் தணிக்கை அறிக்கை மற்றும் கணக்குகளை பரிசீலித்தல்.


*சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் கிராம சபை, கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், திட்டச் செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு அறிக்கைகளைத் தணிக்கை செய்திடும் சமூகத் தணிக்கை அமைப்பாகவும் செயல்படும்.


பொது மக்கள் பங்களிப்புகள்:


* கிராம ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள்கிராம சபையில் கலந்து கொண்டு ஊராட்சி தொடர்பாக தங்களின் கருத்துகளை எடுத்துரைக்கலாம். கிராம ஊராட்சியின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளித்தல் அல்லது குறைகளைத் தெரிவிக்கலாம். பயனாளிகள் தொடர்பான திட்டங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை வழங்கலாம். கிராம ஊராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் மீது தங்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன் கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக தங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்கலாம்.


- ரா.செல்வம், 
மாநில  ஒருங்கிணைப்பாளர்,
மாற்றத்திற்கான திறனாளிகள் அணி,
பத்து ரூபாய் இயக்கம்,



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.