Type Here to Get Search Results !

குப்பை மேடாக மாறும் பாப்பிரெட்டிபட்டி, கடமையை செய்ய தவறிய பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மாரி

Arun Kumar J

 அக்டோபர் 15|புரட்டாசி 29





தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  நகராட்சி நிர்வாகம் நாள்தோறும் ஆங்காங்கே உள்ள குப்பைகளை தூய்மை‌ பணியாளர்கள் மூலம் சேகரித்து வருகின்றனர் அப்படி சேகரிக்கும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையில் மக்கும் குப்பைகள் மக்காத‌ குப்பைகள் என்று முறையாக தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட பொறுப்பு பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியின் கடமையாகும். திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து உருவாகும் திடக்கழிவுகளை சேகரித்தல், செய்தல், சுத்திகரித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் பாதுகாப்பாக அகற்றுதல் போன்ற செயல்முறைகளைக் குறிக்கிறது மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றும் மனித ஆரோக்கியத்தைப் பேணுவது இதன் முக்கிய நோக்கங்களாகும்.




திடக்கழிவுகளை முறையாக பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்ய பாப்பிரெட்டிப்பட்டி முருகன் கோயில் மலைப்பகுதி பின்புறம் வாணியாறு கால்வாய்க்கு அருகில் அதற்க்கான இடம் இருந்தும் முறையாக செயல்படுத்தாமல் பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம்  திடக்கழிவுகளை அங்கேயே கொட்டிவிட்டு செல்கின்றனர்.


தேங்கிய குப்பைகளை கழிவுகளினால் அப்பகுதி துர்நாற்றம் வீசுகின்றது இதனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது கால்நடைகள் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதால் இறக்கும் நிலை ஏற்படுகின்றது தன் கடமையை செய்ய தவறிய பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மாரி அவர்கள் மீது பொதுமக்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்  வைக்கின்றனர் தருமபுரி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாப்பிரெட்டிப்பட்டி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.