அக்டோபர் 25|ஐப்பசி 05
தமிழகம்
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில் பாதுகாப்போடு இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்
பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தி உளளார்.
- அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

