அக்டோபர் 21| ஐப்பசி 04
சென்னை,
ஏழு தமிழர்கள் விடுதலைக்காக 2014 ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை தமிழர் முன்னேற்றப் படை முன்னெடுத்த முற்றுகைப் போராட்டத்திற்காக போராட்ட வழக்கில் போட்ட வழக்கிற்காக நாம் நம் தொண்டர்களும் பத்து ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக சென்று கொண்டு வருகிறோம். தற்போது அந்த வழக்கு சென்னை பீச் கோர்ட்டுக்கு வந்துள்ளது வழக்கு விசாரணையின் போது என்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என் தரப்பு வழக்கறிஞர் என் உடல்நிலை கருதி நீதிபதி இடம் மனு போட்டால் தற்போது உள்ள அரசு தரப்பு வழக்கறிஞர் என் மீதும் என் உடன் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் வாரண்ட் போட சொல்லி நீதிபதியிடம் போராட்டம் செய்கிறார் .
அதன் அடிப்படையிலேயே ஏழு தமிழர்கள் விடுதலைப் போராட்டத்திற்கான வழக்கில் எங்கள் அனைவரின் மீதும் தற்போது வாரண்ட் போடப்பட்டுள்ளது வருகின்ற 23. 10. 2025 .வியாழன் கிழமை அன்று காலை 11:30 மணியளவில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை ஏற்ப எமையும் எங்கள் இயக்கத் தொண்டர்களையும் சிறையில் அடைக்க கோரி நீதிமன்ற வளாகம் வாயிலில் உண்ணா விரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றும் இதற்கெல்லாம் கலங்குபவள் நான் அல்ல என் மக்கள், என்மண், என் மொழி எம் உயிரோடு கலந்துள்ளது என்று வீரலட்சுமி தெரிவித்துள்ளார்
- கி.வீரலட்சுமி MA நிறுவனத் தலைவர் தமிழர் முன்னேற்றப் படை .

