Type Here to Get Search Results !

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருமதி சிவசவுந்தரவள்ளி I.A.S அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

Arun Kumar J

திருப்பத்தூர் அக்டோபர் 05 | புரட்டாசி 18



கிராம நிர்வாக அலுவலர்களின் (VAO) தவறுகளை மறைத்து காப்பாற்றும் வகையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய இடமாற்ற உத்தரவை ரத்து செய்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பட்டா மாற்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்த சில கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எதிராக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய இடமாற்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர் திருமதி சிவ சவுந்தரவள்ளி I.A.S. அவர்களால் எந்தவிதமான விசாரணையும் நடத்தப்படாமல் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது மிகவும் கடுமையாக கண்டிக்கப்படுவதுடன் பொறுப்பற்ற செயலாக கருதப்படுகின்றது.

நிர்வாகத்தில் நேர்மை பொறுப்புணர்வு மக்கள் நலன் ஆகியவற்றை புறக்கணித்து தவறு செய்தவர்களை காப்பாற்றும் வகையில் எடுத்துள்ள இந்த நடவடிக்கை அரசு சேவையின் ஒழுக்க நெறிகளையும் நல்லாட்சியின் அடிப்படைகளையும் முற்றிலும் புறக்கணிப்பதாகும்.


தமிழக அரசு உடனடியாக மாவட்ட  ஆட்சியர் திருமதி சிவ சவுந்தரவள்ளி I.A.S. அவர்களை சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்றும், தவறு செய்த கிராம நிர்வாக அதிகாரிகளை சட்டத்தின்முன் நிறுத்தி  உரிய தண்டனை பெற்றுத்தர  வேண்டும்.

மக்களின் நம்பிக்கையை சீர் குலைக்கும், ஊழலுக்கு ஆதரவாகவும் நடைபெறும் இத்தகைய செயல்களை கடுமையாகக் கண்டிக்கிறோம். இப்படிப்பட்ட மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டியது தமிழக அரசின் மிக முக்கிய கடமையாகும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பத்தூர் மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.