நவம்பர் 21|கார்த்திகை 05
பாப்பிரெட்டிபட்டி
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்துள்ள மஞ்சவாடி கணவாய் பகுதியில் நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் பாரம் ஏற்றிய கனரக வாகனம் (லாரி) சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது அயோத்தியாப்பட்டிணத்தில் இருந்து அரூர் நோக்கி இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் அங்கு பழுதடைந்த சாலை குழியில் விட்டதில் தன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மேதி அந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக லாரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிபட்டி காவல்துறை இறந்தவரின் உடலை பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதி அதிகமான போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக காணப்பட்டது.

