நவம்பர் 21|கார்த்திகை 05
தருமபுரி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆலோசனைப்படி பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம். அவர்கள் வழிகாட்டுதலின்படிதலைமை ரெ சதீஷ் IAS தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ மணி MP அவர்கள் முன்னிலையில் தர்மபுரி முதல் பெண்ணாகரம் (LSS ) வரை புதிய பேருந்து (தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் டிக்கெட் விநியோகம்) துவக்கி வைத்தல் மற்றும் ஏற்கனவே செயல் முறையில் இருந்த அதே வழித்தடத்தில் பழைய பேருந்துக்கு பதிலாக 5 புதிய பேருந்தை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள், நகர மன்ற தலைவர்,கழக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

