நவம்பர் 21|கார்த்திகை 05
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏரிக்கொடி பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் சட்டவிரோதமாக பார் நடத்தி வந்ததாக தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து கிராம காவல் நிலைய போலீஸ் அந்த சட்டவிரோத பாரில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் அனுமதியின்றி பார் இயக்கப்பட்டது உறுதியாகியதால் உடனடியாக பார் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் பார் நடத்தி வந்த அண்ணாமலை என்பவரை காவல்துறை கைது செய்தனர்.
இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சௌமியா அவர்களின் அறிவுறுத்தலின்படி சட்ட விரோதமாக நடத்தி வரும் அனைத்து பார்களையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தார் இதன் காரணமாக இன்று திருப்பத்தூர் ஏரிக்கோடி பகுதியில் திருப்பத்தூர் கிராம காவல் துணை ஆய்வாளர் சதீஷ்குமார் சட்ட விரோதமாக பார் நடத்தி வந்த அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் பார் நடத்தி வந்த கடைக்கு களால் ஆய்வாளர் மற்றும் விஏஓ சீல் வைத்தனர் இந்த சம்பவம் ஏரிக்கொடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

