நவம்பர் 01|ஐப்பசி 15
காரிமங்கலம்
தருமபுரி மேற்கு மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம் 31.10.2025 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக காரிமங்கலம் அலுவலகம் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் திரு.மனோகரன் Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பார்வையாளர், திரு.எவரெஸ்ட் நரேஷ் குமார் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பார்வையாளர் திரு.அரியப்பன் அவர்களின் முன்னிலையில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் P.பழனியப்பன் அவர்கள்,
மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 28.10.2025 அன்று மாமல்லாபுரத்தில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சிக்கூட்டத்தில் வழங்கிய ஆலோசனைகள் குறித்தும் 'Special Intensive Revision (SIR) திருத்தத்தை 04.11.2025 அன்று முதல் நடைமுறைபடுத்துவது குறித்தும், மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை "எளியோரின் எழுச்சி" நாளாக கொண்டாடுவது குறித்தும் விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், இளைஞரணி துணை அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.



