Type Here to Get Search Results !

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் வீடு கட்டும் தேவைக்காக அரசு மணல் குவாரி உடனடியாக திறக்க கோரி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்

Arun Kumar J

 நவம்பர் 10|ஐப்பசி 24




இராணிப்பேட்டை


மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா  பொதுமக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார் அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள் பட்டா மாறுதல் இலவச வீட்டு மனைப்பட்டா முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை காவல் துறை  ஊரக வளர்ச்சித்துறை நகராட்சி நிர்வாகங்கள் பேரூராட்சித்துறை கூட்டுறவு மின்சாரத்துறை  சார்பான குறைகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கிராம பொதுப் பிரச்சனைகள் குடிநீர் வசதி வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் என 448 மனுக்கள் வரப்பெற்றன.



இந்த நிலையில் ராணிப்பேட்டை காரை பகுதியைச் சேர்ந்த மு.ஜெயகுமார் தலைமையில்,     100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திரண்டு வந்து  கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில் தமிழகத்தில் நீர்வள ஆதாரத்துறையின்மூலம் 9 இடங்களில் அரசு மணல் குவாரி தொடங்க உள்ளதை வரவேற்கிறோம்.பொது மக்கள் வீடு கட்ட அத்தியாவசியத் தேவையாக ஆற்று மணல் இருந்து வருகிறது.அரசின்  கலைஞர் கனவு இல்லம் திட்டம் தற்போது எம் - சாண்ட் கொண்டு கட்டப்படுகிறது.இந்த எம் சாண்ட் தயரிக்க இயற்கையான மலைகளை உடைத்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ஆற்று மணல் இயற்கையாக உருவாகிறது.மணல் அள்ளினால் திரும்ப  கிடைக்கும், ஆனால் மலையை அழித்தால் திரும்ப வராது. மேலும் இந்த  ஆற்று  மணல்  தொழிலை நம்பி 25 ஆயிரம் லாரி உரிமையளர்கள்,ஓட்டுநர்கள்,கூலித்தொழிலாளர்கள் என  சுமார் 1 லட்சம் பேரின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆகவே பொதுமக்களின் தேவையை  கருத்தில்  கொண்டும், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கூலித்தொழிலாளர்களின்  வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக அரசு மணல் குவாரியை திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேற்கண்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டும்  என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சிறப்பு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட ரூ.96 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  



இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) கீதாலட்சுமி, சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, உதவி ஆணையர்  கலால் தராஜ்குமார்,  நேர்முக உதவியாளர்  (நிலம்)ரமேஷ் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 



எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.