Type Here to Get Search Results !

முதியோர் காப்பகத்தில் இறந்த ஆதரவற்ற தாத்தாவை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

Arun Kumar J

 நவம்பர் 12|ஐப்பசி 26




தருமபுரி


தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அன்னையர் ஆலயம் முதியோர் இல்லத்தில் 75 வயது மதிக்கத்தக்க கணேசன் என்ற தாத்தா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் உறவுகள் யாருமின்றி முதியோர் இல்லத்தில் சேர்ந்துள்ளார், வயது மூப்பு காரணமாக இயற்கை மரணம் அடைந்தார். இவரது புனித உடலை தங்கள் உறவாக எண்ணி மை தருமபுரி அமைப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் 173 ஆதரவற்றும் ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். கணேசன் தாத்தாவின் புனித உடலை மை தருமபுரி அமைப்பின் நிறுவன தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் சையத் ஜாபர், அமரர் ஊர்தி ஓட்டுனர் செந்தில் ஆகியோர் இணைந்து நல்லடக்கம் செய்தனர். மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.