நவம்பர் 11|ஐப்பசி 25
தஞ்சாவூர்
தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம், தஞ்சாவூர் மாவட்டத்தில் செயற்குழு கூட்டம் கடந்த 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை ஹாய் ஹோட்டலில் நடைபெற்றது. TNETA தஞ்சை மாவட்ட தலைவர் திரு.பாலமுருகன் தலைமையில் TNETA மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் திரு.செல்லத்துரை து.தலைவர் திரு.புவனேசன் து.செயலாளர் திரு.முருகானந்தம் IT செயலாளர் திரு.விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் TNETA தஞ்சாவூர் மாவட்ட அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொழிற்சங்கத்தின் உறுதிமொழி ஏற்கப்பட்டு செயற்குழு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மாநில தலைவர் திரு மாயாண்டி அவர்கள் சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் திரு.ரமேஷ் தொழிற்சங்கத் தின் வழிமுறைகளை எடுத்துரைத்தார். கிளை நிர்வாகிகள் தஞ்சாவூர் மாவட்ட TNETA உறுப்பினர்களை அரசின் பயனாளியாக உருவாக்கவும் , பயிற்சி வகுப்புகள் மூலம் டெக்னீசியன் ஆக உருவாக்கவும் முனைப்புடன் செயல்படுவோம் என எடுத்துரைத்தனர். மாவட்ட நிர்வாகிகள் விரைவில் மாவட்டத்தில் புதிய கிளைகள் திறப்பது சம்பந்தமாக உறுதி அளித்தனர்.


