நவம்பர் 05|ஐப்பசி 19
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் சார்பில் கடந்த 01.11.2025 அன்று மாலை மாமன்னர் இராசராசசோழனின் 1040வது சதய விழா முன்னிட்டு TNETA மாவட்ட தலைவர் திரு.பாலமுருகன் தலைமையில் தொடர்ந்து 3ஆம் ஆண்டாக மாமன்னர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் திரு.செல்லத்துரை, து.தலைவர் திரு.புவனேசன், து.செயலாளர் திரு.முருகானந்தம், IT செயலாளர் திரு.விஜயகுமார் போன்றோர் மற்றும் தஞ்சாவூர் கிளை பகுதி-2 நிர்வாகிகள் செயலாளர் திரு ஐயப்பன், பொருளாளர் திரு.பாலசந்தர், து.தலைவர் திரு.சுரேஷ்மாறன் ஒரத்தநாடு கிளை நிர்வாகிகள் செயலாளர் திரு.வீரமணி, பொருளாளர் திரு.இளவரசன், IT செயலாளர் திரு.சதீஷ்குமார் மற்றும் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்றனர்.



