Type Here to Get Search Results !

இந்து சமய அறநிலையத்துறையில் மாற்றுதிறனாளிகளுடன் உதவியாளருக்கும் கட்டணமின்றி இலவச தரிசனம்

Arun Kumar J

 நவம்பர் 05|ஐப்பசி 19




♨️ இந்து சமய அறநிலையத்துறையில் மாற்றுதிறனாளிகளுக்கு உள்ள வசதிகள் பற்றி தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் பெறப்பட்ட தகவல்கள்.


1. மாற்றுத்திறனாளி பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்வதற்காக வருகை தரும் போது, திருக்கோயில்களில் தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு தரிசன கட்டண வழியில் கட்டணம் ஏதுமின்றி மாற்றுத்திறனாளி பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்திட அனைத்து திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தினை கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுத்திட சார்நிலை அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.


2. மாற்றுத்திறனாளிகளை கவனித்துக் கொள்வதற்காக அவர்களுடன் வரப்பெறும் ஒரு நபரை மட்டும் கட்டணமில்லாமல் சிறப்பு தரிசன வழியில் அனுமதிக்கப்பட வேண்டும்.


3. பார்த்தவுடன் மாற்றுத்திறனாளிகள் என அடையாளம் காண இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு (செவித்திறன் குறைப்பாடு போன்றவை) மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையினை சரிபார்த்து விட்டு இவர்களை அனுமதிக்க வேண்டும்.


4. இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளின் திருமணம் - மணமக்களுக்கு 4 கிராம் பொன் தாலி திருக்கோயில் சார்பாக வழங்குதல்.


5. மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் திருமணத்திற்கான கட்டணம் அவர்களுக்கு வசூலிக்கப்படமாட்டாது. மேலும், திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.


6. இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும்"..

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.