நவம்பர் 19|கார்த்திகை 03
சென்னை
பொதுமக்கள் தொழிலாளர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரின் உரிமைக்காக தனது கல்லூரி பேராசிரியர் பதவியை உதறி தள்ளிவிட்டு அவர்களின் உரிமைகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஆர். கீதா அம்மாவுக்கு ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கியமான ஊடகம் அங்கீகாரம் கொடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழ்நாட்டில் எத்தனையோ ஊடகங்கள் விருது கொடுக்கிறார்கள். உண்மையாக களத்தில் மக்கள் பணி செய்யும் போராளிகளை எந்த ஊடகமும் அங்கீகரிப்பது இல்லை. விருதும் கொடுப்பதுமில்லை. கீதா அம்மா போன்றோர்களுக்கு எல்லாம் எப்போதோ விருதுகள் கொடுத்திருக்கப்பட வேண்டும். அவர்களின் உழைப்பு, தியாகம், சேவை, எளிமை இவை எல்லாம் காலத்தால் அழிக்க முடியாத சிறப்புகள் ஆகும்.
காலம் கடந்து அவள் விகடன் இந்த விருதை அறிவித்து இருந்தாலும், இப்போதாவது கீதா அம்மா போன்ற மாமனிதர்கள், தன்னலமற்ற சேவர்கள் இருப்பதை கண்டுபிடித்த அவள் விகடனுக்கும் அந்த ஆசிரியர் குழுவுக்கும் எனது இயக்கம் சார்பில் நன்றிகள். கீதா அம்மாவுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெண்ணுரிமை இயக்கம், குடிசை மக்கள், கட்டிடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம் என எப்போதும் சிந்திக்கூடிய சிறந்த ஆளுமை இவர். இது அமைப்புச்சரா தொழிலாளர் கூட்டமைப்புக்கு கிடைத்த விருது என பெருந்தன்மையாக சொல்லுவார்கள் கீதா அம்மா அவர்கள், என்றும் மக்கள் பணி சிறக்கட்டும் நீண்ட ஆயுளுடன் வாழ என் நெஞ்சார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- அருள்தாஸ்

