நவம்பர் 19|கார்த்திகை 03
கன்யாகுமரி
கன்யாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த கோழிப்பூர்விளை பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி குழந்தையாக இருக்கும் போது தாயார் இறந்துவிட தந்தையும் வேறு திருமணம் செய்து குழந்தைகளை விட்டு சென்ற நிலையில், பாட்டி தாத்தாவின் பாராமரிப்பில் வளர்ந்த 16 வயது ஆன சிறுமி தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பிற்கு சேர்ந்து சில வாரத்திற்கு பிறகு கிட்டதட்ட ஐந்து மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை.
இந்த தகவலை அறிந்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் நிமிர் (The Rising Team) குழுவின் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சரோஜா மற்றும் கலா ஆகியோர் சம்பந்தப்பட்ட சிறுமியை வளர்த்து வரும் தாத்தா, பாட்டியை சந்தித்து அவர்களின் குடும்ப வறுமையின் காரணமாக சிறுமியின் படிப்பு தொடராத நிலையை கண்டறிந்தும், அந்த சிறுமியை வளர்க்க படும் துயரத்தை உணர்ந்து,
தாத்தா பாட்டியின் விருப்பத்தின் பெயரில் அந்த சிறுமியை சிதறால் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து, அங்கிருந்து படிப்பை தொடர ஏற்பாடும் செய்து வைத்தனர். சிறுமியின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிநடத்திய 'நிமிர்' குழுவினரை தாத்தா பாட்டி மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

