Type Here to Get Search Results !

H - மின் உரிமம் தகுதி தேர்வுக்கு வட சென்னை அரசு ITI-யில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது

Arun Kumar J

 நவம்பர் 20|கார்த்திகை 04






வட சென்னை 


வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 16.11.2025 அன்று  மின்கம்பியாள் உதவியாளர் (H) தகுதி தேர்விற்கான பயிற்சி வகுப்பு நடைப்ற்றது. இப்பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு  எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் சார்ந்த திருவள்ளூர் மாவட்ட து.தலைவர்  திரு சுல்தான் தலைமையில் கும்மிடிப்பூண்டி கிளை பகுதி-1 தலைவர் திரு சுரேஷ்குமார் து.செயலாளர் திரு ஹரி ஆதிமூலம் கும்மிடிப்பூண்டி கிளை பகுதி-2 தலைவர் திரு யோகானந்தர பொருளாளர் திரு சாமிநாதன் போன்றோர் முன்னிலையில் TNETA தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 



அனுபமுள்ள மின் பணியாளர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் மூன்று ஆண்டுகளுக்கு  ஒரு முறை நடைபெறும் மின்கம்பி உதவியாளா் தோ்வில் கலந்துகொள்ளும் தோ்வா்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் 60 போ் கலந்து கொண்டனா். கலந்துகொண்ட அனைவருக்கும் கையடக்க பயிற்சி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. மின் உரிமம் தகுதிச்சான்றிதழ் பற்றிய விழிப்புணா்வு மற்றும் மின்சாரத்திலிருந்து நம்மையும் மக்களையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிய கருத்துகள் ஆலோசிக்கப்பட்டது.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.