Type Here to Get Search Results !

குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்

Arun Kumar J

 டிசம்பர் 04|கார்த்திகை 18





மதுரை



திருப்பரங்குன்றம் மலை, குமரனின் மலையே என வலியுறுத்தியும், அந்த மலையை பாதுகாக்கவும், இந்து அமைப்புகள் இந்து மக்களை திரட்டி மதுரையில்  நடத்திய போராட்டத்தால்,  நேற்று மதுரை மக்கள் வெள்ளத்தால் திண்டாடியது. இதனால் பல மணி நேரம் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.



மதுரை பழங்காநத்தம் பகுதியில்  இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், நேற்று மதுரையின் பல பகுதியில் போக்குவரத்து நெரிசல்  காணப்பட்டது. மேலும், போராட்டத்தை தடுக்க குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக, குவிந்த பொதுமக்களை தடுக்க முடியாத நிலையில், ஏனோதானாவென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முறையாக போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால்,  பல பகுதிகளில் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.  மேலும் பல பகுதிகளில் இருந்து வாகனங்களில் பொதுமக்கள் மதுரை வர காவல்துறை பல தடைகளை ஏற்படுத்திய நிலையிலும், பல முக்கிய நபர்களை கைது செய்தும், வீட்டுக்காவலிலும் வைத்திருந்த நிலையில், அதையும் மீறி,  லட்சக்கணக்கான மக்கள் மதுரைக்கு பாதயாத்திரையாக வருகை தந்து,  திருப்பரங்குன்றம் மட்டுமல்ல குன்று இருக்கும் இடமெல்லாமல் குமரன் இருக்கும் இடத்தான் என்பதை நிரூபித்ததுடன்,  தாங்கள் முருகனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்பதை மெய்ப்பித்து உள்ளனர்.



மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலும் அதன் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபு தாஹிர் என்பவர், நேர்த்திகடன் செலுத்துவதற்காக ஆடு மற்றும் இரண்டு சேவல்களுடன் தர்காவுக்கு செல்ல வந்திருந்தார். ஆனால், “மலைக்கு மேல் அனுமதிக்க முடியாது” எனக் கூறி அங்கிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். “காலம்காலமாக நேர்த்திக்கடன் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இப்போது தடுப்பது ஏன்?” எனக் அப்பகுதி முஸ்லிம்கள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தர்கா நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அப்போது அவர், வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக தர்கா நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். ஆய்வு நடத்திய வருவாய் கோட்டாட்சியர், இங்கு இந்துக்கள் அதிகமாக உள்ளதால் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது” எனக் கூறி தடை விதித்ததாக கூறப்பட்து.



இதனை அறிந்து கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றிருந்தார்.  அப்போது அவருடன் வந்தவர்கள், மலையின் படிக்கட்டில் அமர்ந்து அசைவ பிரியாணி சாப்பிட்டனர். அந்த புகைப்படத்தையும் தங்களது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தனர். மேலும்  நவாஸ்கனியின் பேச்சும் ஒருதலைப்படசமாக இருந்தது.  நவாஸ்கனியின் செயல்  இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால்,  தமிழ்நாட்டில்  மத கலவரம் ஏற்படும் சூழலை உருவாக்கி உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக, ஒற்றுமையுடன் இருந்து வரும், இந்து இஸ்லாயிமர்களிடையே மோதல் ஏற்படும் சூழலை பல பகுதிகளில்  உருவாக்கி உள்ளது. நவாஸ்கனியின் செயலுக்கு,  பாஜகவும் இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. அவரது பதவியை பறிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வேல் ஊர்வலம் நடத்தப்பட்டது.



ஆனால், இந்த விஷயத்தில் திமுக அரசின் நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமாக இருந்ததால் இந்து மக்களிடையே குறிப்பாக தென்மாவட்ட் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து,  திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதற்கான நோட்டீஸ், சுவரொட்டிகளும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டது. ஆனால், போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்து இருந்தனர்.  இதனை அடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். போராட்டத்தில் இந்து முன்னணியினர் தவிர மற்ற சில இந்து அமைப்புகளும் கலந்து கொள்ள உள்ளதாகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் போராட்டத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், போராட்டம் நடத்துவதற்கோ, கூட்டம் கூடுவதற்கோ அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.



இதனால், இந்து முன்னணி அமைப்பினரின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கவும் செய்திருந்தார்கள். மேலும் பல பகுதிகளில் உள்ள இந்து அமைப்பை சேர்ந்தவர்களை காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்தும், இந்துக்கள் மதுரை வர வாகனங்கள் கொடுக்கக்கூடாது என தனியார் வாகன உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். ஆனால், திட்டமிட்டபடி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்துவோம், அரசின் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவித்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், இந்து அமைப்புகள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அவரச மனு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மதுரை அருகே இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியது. உத்தரவின் படி, பழங்காநத்தத்தில் நேற்று மாலை (  பிப்ரவரி 4ந்தேதி) மாலை 5 – 6 மணி வரை)  அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனவும், பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என நிபந்தனைகளையும் வழங்கியுள்ளது. போராட்டம் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கியிருந்தது.



உயர்நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் தொடங்கினர். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தியும், மற்றொரு சமூகத்தினர் சொந்தம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கம்மீட்டு கொண்டு போராட்டத்தை நடத்தினர். லட்சத்துக்கும் அதிகமானோர் அநத பகுதிகளில் கூடினர். மேலும் பல ஆயிரம்பேர் திருப்பரங்குன்றமும் செனிறனர். இந்த அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மதுரையின் பல பகுதிகளில் மக்கள் கூடிய காரணத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்துக்களின் போராட்டத்தை தடுக்க குவிக்கப்பட்ட காவல்துறையினர், போராட்டத்தை தடுக்க முடியாத நிலையில் இருந்தனர். இதனால் பல‘ பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இரவு வரை காணப்பட்டது


எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.