Type Here to Get Search Results !

நீங்கள் கொடுத்த SIR படிவத்தை BLO அவரது மொபைல் ஆப்-பில் (Mobile app) சப்மிட் (submit) செய்துவிட்டாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள

Arun Kumar J

 டிசம்பர் 03 |கார்த்திகை 17










நீங்கள் கொடுத்த SIR படிவத்தை BLO அவரது மொபைல் ஆப்-பில் (Mobile app) சப்மிட் (submit) செய்துவிட்டாரா என்று பார்க்க, இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்: https://voters.eci.gov.in/login


  1. அங்கு "Fill Enumeration Form" பகுதிக்குச் செல்லுங்கள். படம் 1.

  2. உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுங்கள்.

  3. உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (Epic number) அங்கே டைப் (type) செய்யுங்கள்.


நீங்கள் கொடுத்த விவரம் சமர்ப்பிக்கப்பட்டு (submitted) இருந்தால், உங்கள் போன் நம்பருடன் "Submitted" என்று காட்டும். படம் 2.


பூர்த்தி செய்து BLO விடம் கொடுத்தும், உங்கள் pre-filled data வை காட்டுகிறது என்றால் உங்கள் படிவத்தை BLO இன்னும் சப்மிட் செய்யவில்லை என்று அர்த்தம் (படம் 3). உடனே உங்கள் BLO-வைத் தொடர்புகொண்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


அதில் ஏதேனும் ஆவணங்கள் சப்மிட் செய்யவும் என்று காட்டினால், அந்த ஆவணத்தை  BLO விடம் உடனடியாக கொடுத்து விடுங்கள்.  


பூர்த்தி செய்யப்பட்ட  SIR படிவங்கள் 35.86% மட்டுமே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனக்கு தெரிந்தவரை பூர்த்தி செய்து கொடுத்தவர்களில் பலர் 2வது/ 3வது பகுதியை காலியாகவோ, அல்லது தவறாகவோ பூர்த்தி செய்தி கொடுத்திருக்கிறார்கள். 


தமிழ்நாட்டில் டிசம்பர் 4 ஆம் தேதி வரைவு பட்டியல் வெளிவரும் போது குறைந்தது 50 முதல் 75 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருக்கலாம்.. இது உறுதி!


எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.